ஜல்லிக்கட்டு, சுருளி என்று வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிர்களை கவர்ந்தவர் இயக்குநர் லிஜோ பெல்லிசேரி. இவர், தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். மம்முட்டி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம், தமிழிலும் வெளியாகி, நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த படம் தன்னுடைய படத்தை காப்பி அடித்து எடுத்துள்ளதாக, இயக்குநர் ஹலிதா சமீம் தெரிவித்துள்ளார். இந்த கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூவரசம் பீப்பி, சில்லுக் கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களை இயக்கிய ஹலிதா சமீம், தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஏலே படத்திற்காக நாங்கள் தேர்வு செய்த கிராமத்தையும், அந்த கிராம மக்களையும், இந்த படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
என் படத்தில் இடம்பெற்ற முக்கால்வாசியான கதாபாத்திரங்கள், இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், கதாபாத்திரங்களின் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனக்காக நான் தான் பேச வேண்டும். ஆதங்கப்பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இந்த பதிவை வெளியிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.