தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிகளிலும் ஆர்வம் கொண்ட அஜித், பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, துப்பாக்கி சுடுதல், ட்ரோன் இயக்குதல் என்று பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறு இருக்க, இவரது மகன் ஆத்விக்கும், கால்பந்து போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், சென்னையின் எப்.சி அணியின் ஜெர்சியை அணிந்து, அந்த அணிக்கு அவர் சப்போர்ட் செய்துள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள், அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். மேலும், அஜித்தின் ரத்தம் என்பதால், அவருக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருப்பது இயல்பு தான் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.