பழங்காலங்களில் வாழ்ந்த விலங்குகள் குறித்து, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் செய்து வருகின்றனர். பெரும்பாலும், ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகளுக்கு கிடைக்கும் பழங்கால விலங்குகள், சுமார் 2 ஆயிரம் அல்லது அதற்கு உட்பட்ட காலங்களை சேர்ந்தவைகளாக தான் இருக்கும். ஆனால், தற்போது, 3 ஆயிரத்து 500 ஆண்டு காலங்கள், பழமையான கரடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 4,600 கிமீ தொலைவில் நியூ சைபீரிய என்ற தீவுக் கூட்டம் உள்ளது. இந்த தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு சிறிய பகுதி தான் பெர்மாஃப்ரோஸ்ட். இந்த பகுதியில், விவசாயிகள் சிலர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு உயிரிழந்த கிடந்த கரடியின் உடலை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, இந்த தகவல் விஞ்ஞானிகளின் கவனத்திற்கு சென்றது. பின்னர், அங்கு வந்த அவர்கள் ஆராய்ச்சி நடத்தி வந்த நிலையில், அந்த கரடியின் உடல், சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்ட ஆராய்ச்சியாளர்கள், இத்தனை ஆண்டுகள் ஆகியும், அதன் உடல் அழுகவில்லையே என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர். குளிரான இடத்தில் அதன் உடல் இருப்பதால் தான், இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், அழுகவில்லை என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்தக் கரடி 1.55 மீட்டர் (5.09 அடி) உயரம், சுமார் 78 கிலோ எடை கொண்டதாக இருந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் பழமையான விலங்கு ஆய்வாளர்கள் கைகளில் கிடைப்பது இதுவே முதல் முறை.. அதன் உள் உறுப்புகள் குறித்து ஆய்வு செய்யவும் மூளையை ஆய்வாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்.