சினிமா
ரொம்ப கம்மியா இருக்கே…லியோ படத்திற்கு த்ரிஷா வாங்கும் சம்பளம்..!
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இது விஜய்யின் 67 வது படமாகும்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். ஏற்கனவே நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து ஆதி, கில்லி, திருப்பாச்சி, குருவி என நான்கு படங்களில் நடித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் விஜய்யுடன் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகை த்ரிஷா, ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் லியோ படத்திற்காக நடிகை த்ரிஷாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login