வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் இன்று (பிப்.27) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதே போல நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 9 மணி நிலவரப்படி மேகாலயாவில் 12.06% வாக்குப்பதிவும், நாகலாந்தில் 15.5% வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.