2-வது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. காஷ்மீரில் நடந்து வரும் படப்பிடிப்பில், மிஷ்கின், ஜிவிஎம், சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இதனிடையே லியோ படத்தின் ஹூட்டிங் முடிந்துவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில், இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்.
சுமார் -12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து, என்னுடைய பகுதியையை நிறைவு செய்தது. படத்தின் இணை இயக்குனர்களின் அன்பு என்னை ஆச்சிரியப்பட வைத்தது. தயாரிப்பாளர் லலித் கடும் குளிரிலும் உழைத்து கொண்டு இருக்கிறார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அருமை தம்பி விஜய் என அனைவரும் என்னுடன் பண்பாக நடந்து கொண்டதாகவும், அவர்களின் அன்பையும் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.