ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். 48 வயதான இவர், லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ராமநாதபுரத்தில் இருந்து சென்னை மாதவரம் பகுதிக்கு, லோடு ஏற்றிக் கொண்டு வந்தார்.
அப்போது, திருநங்கை ஒருவரை சந்தித்த கணேசன், அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இறுதியில், அனைத்தும் முடிந்த பிறகு, தனக்கு பேசிய பணத்தைவிட, அதிகமாக தரவேண்டும் என்று அந்த திருநங்கை கேட்டுள்ளார்.
இதற்கு கணேசன் மறுப்பு தெரிவித்ததையடுத்து, சக திருநங்கைகளை அழைத்து, தகராறு செய்வேன் என்று சனா மிரட்டினார். இதனால், கடும் கோபம் அடைந்த கணேசன், திருநங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கணேசனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.