ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கணவன்-மனைவி, டிக்-டாக்கில் வீடியோ வெளியிடுவதன் மூலம், அதிகப்படியான ஃபாலோவர்களை பெற்றிருந்தனர். இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி வீடியோக்கள் வெளியிடுவதை, வாடிக்கையாக வைத்திருந்தனர். அந்த வகையில், சம்பவத்தன்றும், இருவரும் வீடியோ ஒன்றை தயார் செய்வதற்காக, முற்பட்டனர்.
அப்போது, இருவருக்கும் இடையே, பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு, தனது மனைவியின் கண்ணத்தில், கணவர் ஓங்கி அறைந்துள்ளார். இவை அனைத்தும், டிக்-டாக் Live வீடியோவில் பதிவாகி, அதனை அவர்களது ஃபாலோவர்கள் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இந்த வீடியோவை, அந்நாட்டு காவல்துறைக்கு அனுப்பிய ஃபாலோவர்கள், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த வழக்கு, நீதிமன்றம் வரை சென்ற நிலையில், நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
அதாவது, கன்னத்தில் மனைவியை அறைந்த கணவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 3 வருடங்களுக்கு மனைவியை எந்த வகையிலும் தொடர்புகொள்ள கூடாது என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, நம் நாட்டு மக்களுக்கு தான் கொஞ்சம் விநோதமாக தோன்றலாம். தனது கணவன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று மனைவி கூறிய போதும், நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.