சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கூடுதல் நீதிபதிகளான ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகிய ஐந்து பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க அண்மையில் கொலாஜியம் பரிந்துரைத்திருந்தது.

இதனை ஏற்றுக்கொண்டு ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஐந்து பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைக்கவுள்ளார்.

நீதிபதி சத்ய நாராயண பிரசாத்
நீதிபதி விஜயகுமார்
நீதிபதி பரத சக்ரவர்த்தி
நீதிபதி முகமது சபீக்
நீதிபதி ஸ்ரீமதி

RELATED ARTICLES

Recent News