புதுச்சேரி மக்கள் மருந்தகத்தில் மருந்துகளின் விலை 90% குறைவு.இதனால் பொது மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
முத்தியால்பேட்டையில் உள்ள மக்கள் மருந்தகத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று காலை பார்வையிட்டார். அப்போது மருந்தகத்தில் உள்ள மருத்துவ கருவி, உயர் ரக மருந்து வகை ஆகியவற்றை ஆளுநர் எடுத்து பார்த்தார்.
அப்போது சர்க்கரை அளவை கண்டறியும் கருவி, புரோட்டின் பவுடர் ஆகியவற்றை வாங்கிய துணைநிலை ஆளுநர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தவர்களில் யாருக்காவது நீரழிவு நோய் இருக்கிறதா..? சத்து குறைவானவர்கள் இருக்கிறதா…? என கேட்டு இருவருக்கு அவற்றை வழங்கினார். மேலும் ஒரு வாடிக்கையாளர்களுக்கு மருந்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மக்கள் மருந்தாகம் எவ்வளவு மக்களுக்கு பயன் அளிப்பது என்பதற்காக தான் இந்த வாரம் கொண்டாடப்படுகிறது. இன்று மக்கள் மருந்தகத்தை மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என நேரில் பார்வையிட்டேன். இங்கு ஒரு நோயாளி வாங்கி மருந்து ஆயிரம் ரூபாய் இருக்கும். இங்கு அதன் விலை வெறும் 75 ரூபாய் மட்டுமே.
மக்கள் மருந்தகத்தில் 90% குறைவு.மருத்துவர் என்பதினால் இருப்பதினால் எனக்கு தெரிகிறது. குளுக்கோ மீட்டர் 2500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இங்கு 550 ரூபாய். புரோட்டின் பவுடர் வெறும் 75 ரூபாய். வெளியில் 750 ரூபாய்க்கு விற்கிறது. இதே மருந்து தான் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்படுகிறது என்றார்.