வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல், இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அண்ணாமலை மீது IPC 153, 153A(1)(a),505(1)(b) IPC 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.