வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதற்கென்று தனியாக நிறுவனங்கள் சில செயல்பட்டு வருகின்றன. அப்படியான நிறுவனம் ஒன்றை, பிரபல தமிழ் கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் சகோதரி ஷோபா நடத்தி வந்தார்.
மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளத்துடன் வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி, பலரும் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால், பணத்தை வாங்கிய சில மாதங்களில், ஷோபா தலைமறைவான பிறகே, அது மோசடி நிறுவனம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை கொடுத்த ஏமாந்தவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஷோபாவை தேடி வந்தனர். இந்நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த ஷோபாவை, காவல்துறையினர் கைது செய்தனர்.