நாகலாந்தின் முதல்வராக 5-வது முறையாக பதவியேற்ற நெய்பியு ரியோ

நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த பிப்.,27 ல் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ம் தேதி எண்ணப்பட்டது. இதில் பா.ஜ.. 12 இடங்களிலும் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி 25 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து என்.டி.பி.பி கட்சியை சேர்ந்த நெய்பியுரியோ 5 வது முறையாக முதல்வராக பதவியேற்பது உறுதியானது. இந்நிலையில் நாகாலாந்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 5-வது முறையாக நெய்பியு ரியோ முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

Recent News