அசுரன் படத்திற்கு பிறகு, விடுதலை என்ற படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாகத்திற்கான பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ளதால், இந்த மாதம் இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, இயக்குநர் வெற்றிமாறன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சவால்களை பட்டியிட்டார்.
மேலும், படப்பிடிப்பில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறிய வெற்றிமாறன், தனது உரையின் இறுதியில், வடசென்னை 2 மற்றும் வாடிவாசல் படங்களின் அப்டேட் கொடுத்திருந்தார்.
அதாவது, விடுதலை படத்தின் 2-ஆம் பாகம் வெளியான பிறகு, சூர்யாவின் வாடிவாசல் தொடங்கும் என்றும், வாடிவாசல் படத்தை முடித்த பிறகு, வடசென்னை 2-ஆம் பாகம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். வடசென்னை 2-ஆம் பாகம் வருமா? வராதா என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு, தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.