இன்னும் இரண்டே நாளில் அண்ணாமலை நீக்கப்படுவார்…நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவல்

அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அண்ணாமலையை ஏற்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லையென நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த பல நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணமாலை, கட்சியில் இருந்து பழையவர்கள் போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவாகுவார்கள் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா, கருணாநிதி போல் முடிவு எடுப்பேன் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையில் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில் , அண்ணாமலை அடாவடித்தனமாகப் பேசி வருகிறார், அழிவின் விளிம்பை நோக்கிச் அண்ணாமலை சென்று கொண்டிருக்கிறார், அதைதான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது. எந்த தலைவரும் தன்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வதில்லை.

இன்னும் 2 நாளில் பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க வாய்ப்பில்லை. அதிமுகவுடனான கூட்டணியை டெல்லி விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News