56 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நதியா..!

1985-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நதியா. தொடர்ந்து தமிழ்,மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள இவர், 90-களில் தமிழின் முன்னணி ஹீரோவாக இருந்த, நடிகர் மோகன், ரஜினி, சத்யராஜ் ஆகியோருடன் ஹீரோயினாக நடித்தார். மேலும் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில், அம்மா வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

தற்போது தோனி தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், இவானா நடிக்கும் LGM படத்தில் நதியா நடித்து வருகிறார். இந்தநிலையில் மகளிர் தினமான நேற்று ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 56-வயதாகும் நதியா, இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இவரது, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஹீரோயினா எப்படி பார்த்தனோ அப்படியோ இருக்கீங்க என்று பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News