ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4-ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றார். சபாநாயகர் அப்பாவு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஈ.வி.கே.எஸ்இளங்கோவன் பொறுப்பேற்பதற்கு முன்பு அவரது மகன் திருமகன் ஈவேராவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
1984-ம் ஆண்டுக்குப் பின்னர் 2-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 34 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.