தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து செய்ய இருப்பதாக, சமீபத்தில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு, தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இருவரும் தங்களது பணிகளில் மும்மரமாக ஈடுபட்ட வந்தனர்.
இந்நிலையில், இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து, தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எதுவாக இருந்தாலும் சந்தோஷம் தான் என்று தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு இடையூறு என்றால் எங்களுக்கு இடையூறு தான். பிள்ளைகள் சந்தோசமாக இருந்தால் எங்களுக்கும் சந்தோஷம் தான். பிள்ளைகளுடைய பணம் காசு எதுவும் எனக்கு தேவையில்லை. பிள்ளைகளுடைய சந்தோசம் மட்டுமே எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், யாருக்கும் அறிவுரை கூறும் இடத்தில் நாங்கள் இல்லை என்று கூறிய அவர், என்னுடைய நான்கு பிள்ளைகளும் ஒருவருக்கு கூட எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். “நீங்கள் சொல்வது நடந்தால் சந்தோஷம்” என்று கஸ்தூரி ராஜா கூறியிருப்பதை பார்க்கும்போது, இருவரும் ஒன்றாக இணைய இருப்பதாக பரவும் தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. இது தனுஷின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.