கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பி.பி.சி. செய்தி நிறுவனம் சமீபத்தில் ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள் இந்தியாவில் தடை செய்யயப்பட்டது.
இந்த நிலையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக குஜராத் சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ. விபுல் படேல் கொண்டு வந்த இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆவணப்படங்களை வெளியிட்ட பி.பி.சி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அஅரசுக்கு இந்த தீர்மானம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.