சென்னை நந்தனம் வளகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்ரனர். இந்த கல்லூரி முதல்வாரக 50-வயதாகும் ஜார்ஜ் ஆபிரகாம் பணியாற்றி வருகிறார். இவர் மீது 23-வயதாகும் மாணவி ஒருவர் சைதாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதாவது கல்லூரி முதல்வர் வாட்ஸ்ஆப் மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் இவர் மீது அனைத்து மகளிர் போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். ஆனாலும் இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் 8 பேர் அடங்கிய விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். பின்னர் விசாராணை கமிட்டியின் பரிந்துரையின் பேரில் அந்த மாணவி புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நந்தனம் உடற்கல்வி கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த அவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலிசார் கைது செய்தனர்.