தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்திரசேகர் ராவுக்கு நேற்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர். சந்திரசேகர் ராவுக்கு அல்சர் இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.