ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பஞ்சாபிலிருந்து கொல்கத்தா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் ராஜேஷ்குமார் என்பவர் தனது மனைவியுடன் பயணித்தார்.

இந்நிலையில் பீகாரை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் நள்ளிரவில் மதுபோதையில் ராஜேஷ்குமாரின் மனைவி மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, உறங்கிக்கொண்டிருந்த மற்ற பயணிகள் அனைவரும் விழித்து மதுபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை சிறைபிடித்தனர்.

ரயில் உத்தர பிரதேசம் வந்த உடன் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் முன்னா குமார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

RELATED ARTICLES

Recent News