அ.தி.மு.க தற்போது ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் அணி என பிளவுபட்டுள்ளது. ஆனால் மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ளதால் பா.ஜ.க தலைமையிடம், இவர்களின் பிளவை விரும்பவில்லை என்ற தகவல் அரசல் புரசலாக வெளியாகியுள்ளது.
இ.பி.எஸ் டெல்லி சென்று திரும்பியதை தொடர்ந்து அதிமுக-வின் பலத்தை பாஜக ஆராய்ந்துள்ளது. அதில் இவருக்கு மக்கள் பலம் இல்லை என்றும், சசிகலா,ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் ஆகிய மூவரும் ஓட்டு வங்கி அதிகரிக்கும் என கணித்துள்ளது.
அதை வைத்து சில இடங்களை பாஜக பிடிக்க முடியும் என ப்ளான் போட்டுள்ளதாம். இதனால் இபிஎஸ் பலத்தில் நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.