புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி செல்லும் முற்றுகை பேரணி போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை அதானிக்கு வழங்கியதாக கூறி பிரதமர் மோடியை கண்டித்து நடைபெற்றது. மேலும் எல்ஐசி மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்த மக்கள் பணத்தை மோசடி செய்த அதானியை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் அதானி பேனரை செருப்பால் அடித்தும் தீ வைத்து கொளுத்தியும் அவர்களது கண்டனங்களை வெளிப்படுத்தினார்.
இந்த போராட்டத்தில் முன்னாள் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பேரணி நடைபெற்ற போது காவல் துறையினர் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினர்.