கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வேங்கடராமன் என்ற வெங்கட் (வயது 57) கிளினிக் ஒன்றை நடத்தில் அதில் அக்குபங்சர் சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்நிலையில், 13 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பெயரில் வெங்கட் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 2 மொபைல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த மொபைலில் அக்குபங்சர் சிகிச்சையின்போது நோயாளிகளின் ஆடைகளை களைய செய்து, அதனை வீடியோவாக எடுத்தது தெரிய வந்துள்ளது.
வெங்கட் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.