கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது பாஜகவினர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து பா.ஜ.க.இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வினோத்குமார் தலைமையில் பாஜகவினர் சிலர் ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட வந்தனர்.
இது குறித்து தகவலறிந்த மடிப்பாக்கம் காவல் துறையினர் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜ.க.வினர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் பா.ஜ.க.வினர் 7 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி வீட்டின் முன் திமுகவினர் குவிந்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.