உளுந்தூர்பேட்டை சட்டமன்ற திமுக எம்எல்ஏ மணிகண்ணன் ட்விட்டரில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதற்கு வரிசையாக லைக் போட்டுள்ளார். இதனை திலீபன் என்பவர் கண்காணித்து அதை ஸ்கிரீன் ரெக்கார்டு செய்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து மணிகண்ணனின் ட்விட்டர் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் அம்பலமானதும் அவரது அக்கவுண்டை டெலிட் செய்துவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் ட்விட்டரில் இவ்வாறு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் பின்னர் அந்த அக்கவுண்ட் டெலிட் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.