கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி, போயர் காலணியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் ஓசூர் பகுதியில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் புகாரை பெற்றுக் கொண்ட ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போதையில் இருந்த நாராயணனை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து ஓசூர் தலைமை மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனை செய்த பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.