2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, இன்னும் சில நிமிடங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை என்னென்ன அறிவிப்புகள் இருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில், பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பத்திரப்பதிவு வரி உட்பட முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம், பள்ளி கட்டிடங்களுக்கான நிதி, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் முதலீட்டை ஈர்ப்பது, மாவட்ட மருத்துவமனைகள், ஐடி பார்க் என்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.