2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தமிழக சட்டப்பேரவை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, எந்தெந்த துறைக்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அதில், முக்கிய திட்டங்களுக்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:-
1. ருவாய் பற்றாக்குறை, 62 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
2. மொழித் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோருக்கு, சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
3. அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் மொழி பெயர்க்கப்படும்.
4. தமிழகத்தை சேர்ந்த உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, 20 லட்சம் ரூபாயில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
5. இலங்கை தமிழர் குடியிருப்பு கட்ட 223 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
6. தமிழ் வளர்ச்சி துறைக்கு கூடுதலாக 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
7. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்க, ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு. முதன்மை தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூபாய் 25 ஆயிரமும், முதல் நிலை தேர்வு எழுதுவோருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
8. சென்னையில் சர்வதேச அளவிலான உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
9. அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூபாய் 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
10. முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம், ரூபாய் 500 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும்.
11. ரூபாய் 7 ஆயிரம் கோடியில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டம் மூலம், பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும்.
12. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறைக்கு, இந்த ஆண்டு ரூபாய் 3,513 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
13. 711 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள் பயன்படும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மேம்படுத்தப்பட உள்ளது.
14. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
15. பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
16. சிறுபான்மை சமூக மாணவர்களின் கல்விக்கு 1580 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
17. தொழில் முன்னோடி திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
18. வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக 434 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
19. விவசாய கடன் தள்ளுபடிக்கு 2,391 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
20. மருத்துவம் மற்றுமு் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
21. கடல் அரிப்பை தடுப்பதற்கு ரூபாய் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
22. பறவை ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த புதிய மையம் 25 கோடியில் உருவாக்கப்படும்.
23. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில், வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி, பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது.
24. மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்திற்காக 305 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25. கோவையில் 175 கோடி ரூபாய் செலவில், 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.