கடந்த சில மாதங்களாக, பாலிவுட்டில் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள், படுதோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக, பாலிவுட் திரையுலகமே வீழ்ந்து கிடந்தது.
இந்நிலையில், ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில், ஜனவரி 25-ஆம் தேதி அன்று, பதான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, பெரும் வரவேற்பை பெற்றது.
இதுமட்டுமின்றி, ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து, பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தை நாளை (22.03.23), தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட இருப்பதாகவும், அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் வசூல் வேட்டையாடியதை போல், ஓடிடி தளத்திலும், இப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.