Connect with us

Raj News Tamil

BREAKING || தங்கம் விலை அதிரடியாக குறைவு! ஒரு சரவன் விலை என்ன தெரியுமா?

முக்கிய செய்திகள்

BREAKING || தங்கம் விலை அதிரடியாக குறைவு! ஒரு சரவன் விலை என்ன தெரியுமா?

உலக பொருாளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததாலும், கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு சவரன் தங்கத்தின் விலை 44,500 ரூபாய் வரை இருந்தது.

இந்நிலையில், தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, நேற்று ஒரு சவரன் ஆபரனத் தங்கம், ரூபாய் 44 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது, ரூபாய் 800 குறைந்து, 43 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், நேற்று ஒரு கிராம் ஆபரனத் தங்கம், ரூபாய் 5 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது, கிராமுக்கு ரூபாய் 100 குறைந்து, 5 ஆயிரத்து 470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து, 74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in முக்கிய செய்திகள்

To Top