Connect with us

Raj News Tamil

விஜய்க்கு ஆப்பு வைக்கும் அட்லி! லோகேஷ்-க்கு ஆப்பு வைக்கும் கமல்! என்ன இப்படி ஆயிடிச்சே?

சினிமா

விஜய்க்கு ஆப்பு வைக்கும் அட்லி! லோகேஷ்-க்கு ஆப்பு வைக்கும் கமல்! என்ன இப்படி ஆயிடிச்சே?

மாஸ்டர் படத்திற்கு பிறகு, விஜயுடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் லியோ. மிஷ்கின், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன், கௌதம் மேனன் என்று பல்வேறு பிரபலங்கள், இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக, இமாலய வசூல் சாதனையை இப்படம் புரியும் என்று பலரும் எதிர்பார்த்து கிடக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வசூலுக்கு ஆப்பு வைக்கும் வகையிலான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதன்படி, விஜயின் லியோ வெளியாகும் அதே வாரத்தில், அட்லியின் ஜவான் திரைப்படமும், கமலின் இந்தியன் 2 திரைப்படமும், வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டும் பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்கள் என்பதால், லியோ படத்தின் இமாலய வசூல் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் பேவரைட் இயக்குநர்களில் ஒருவரான அட்லியும், லோகேஷின் பேவரைட் நடிகர்களில் ஒருவரான கமலும், இருவருக்கும் போட்டியாக களமிறங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top