பல்வேறு ஆல்பம் பாடல்களை கொடுத்து பிரபலமானவர் ஹிப் ஹாப் ஆதி. பின்னர் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, இசையமைத்து,ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார். மேலும் நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த ஹிப் ஹாப் ஆதி, தற்போது பி.டி.சார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதே நேரம் தான் பி.ஹெச்.டி முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், நான் பி.ஹெச்.டி முடித்துள்ளேன் என்றும் இசைத்துறையில் 6-ஆண்டுகள் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் என்றும் கூறியுள்ளார். இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.