Connect with us

Raj News Tamil

சிம்பு இயக்கும் படத்தில் நடிக்க விருப்பம் – வாரிசு நடிகர்..!

சினிமா

சிம்பு இயக்கும் படத்தில் நடிக்க விருப்பம் – வாரிசு நடிகர்..!

சிம்பு நடித்துள்ள பத்துதல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. ஜிவிஎம், கலையரசன், பிரியா பவானி சங்கர், கெளவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை, சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா உருவாக்கியுள்ளார். வரும் 30-ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ள பத்துதல திரைப்படத்தின், புரோமோஷன் பணிகள் அதிதீவிரமாக நடந்து வருகிரது.

அந்த வகையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. அங்கு மேடையில் பேசிய கவுதம் கார்த்திக் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது அவர், நடிகர் சிம்பு படப்பிடிப்பில் சுமார் 3 கதைகள் குறித்து பேசினார் என்றும், இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு, கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top