காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தகுதி நீக்கத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “பிரதமரின் கண்களில் பயத்தை நான் பார்த்திருக்கிறேன் – அதானி குறித்து நாடாளுமன்றத்தில் எனது அடுத்த பேச்சுக்கு அவர் பயப்படுகிறார்.எளிமையான கேள்வி என்னவென்றால், ஷெல் நிறுவனங்களால் அதானி குழுமத்திற்கு 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் யாருடையது? இந்தக் கேள்வியிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே இந்த நாடகம்” என அதில் பதிவிட்டுள்ளார்.
मैंने प्रधानमंत्री की आखों में डर देखा है – वो डरते हैं अडानी पर संसद में मेरे अगले भाषण से।
— Rahul Gandhi (@RahulGandhi) March 25, 2023
सीधा सवाल है – शेल कंपनियों द्वारा अडानी समूह में लगाया गया ₹20,000 करोड़ का विदेशी पैसा किसका है?
ये सारा नाटक इसी सवाल से ध्यान भटकाने के लिए है।