பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை. தற்போது சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிரார். மேலும் படே மியான் சோட் மியான் படத்திலும் பிசியாக நடித்து வந்தார்.
இப்படத்தின் சண்டைக்காட்சிகள் ஸ்காட்லாந்தில் படமாக்கப்பட்டபோது, அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் நேருக்கு நேர் மோதியதில், அக்ஷய் குமாரின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தளம் சற்று பரபரப்பான நிலையில், ஹூட்டிங் வேலைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.