லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அதிகாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (வயது 44). உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் தொடர்பாக தொழிலதிபர் ஒருவரிடம் 9 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

முதல்கட்டமாக 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது, பிஷோனியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். நேற்று இரவு முழுவதும் பிஷோனியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இரவு முழுவதும் நடைபெற்ற சோதனை இன்று காலை 9 மணியளவில் நிறைவடைந்தது. இதையடுத்து லஞ்ச புகாரில் பிஷோனியை கைது செய்ய முயன்ற போது அவர் அலுவலகத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News