ஒரு நாட்டை வீழ்த்த வேண்டும் என்றால், அந்த நாட்டில் போர் நடத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. அந்த நாடு பொருளாதார சிக்கல்களில் சிக்கினாலே, அது எழுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதற்கு உதாரணமாக, தற்போதைய இலங்கை நாடு, பல்வேறு பொருளாதார சிக்கல்களை அனுபவித்து வருகிறது.
இதே மாதிரியான பொருளாதார சிக்கல்களால், பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலும், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, மக்களை கடுமையாக பாதித்துள்ளது. தக்காளி, கோதுமை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்களும், கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ஒரு டஜன் வாழைப்பழத்தின் விலை, ரூபாய் 250 முதல் 500 வரை, அந்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறதாம். இவ்வாறு தொடர்ந்து விலை உயர்ந்துக் கொண்டே இருந்தால், இலங்கையில் நடைபெற்றதை போன்ற மக்கள் புரட்சி, பாகிஸ்தானிலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.