வீட்டிற்கு வந்த அதிமுக பிரமுகர்.. பாய்ந்து வந்து படுகொலை செய்த மர்ம கும்பல்..

சென்னை பெரம்பூர் தெற்கு பகுதி, அதிமுக கழக செயலாளராக இருப்பவர் இளங்கோவன். இவர் நேற்று இரவு கட்சி பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளங்கோவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News