பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்த அலோக் குமார், கொல்கத்தாவில் உள்ள டில்ஜாலா பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு, மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார்.
அப்போது, குழந்தை வரம் வேண்டும் என்றால், வரும் நவராத்திரிக்குள், சிறுமி ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று அந்த மந்திரவாதி கூறியுள்ளார். இதன்காரணமாக, தனது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுமியை கடத்திய அவர், கொலை செய்துவிட்டு, பூஜை செய்வதற்காக அந்த உடலை தயார் செய்துள்ளார்.
இதற்கிடையே, சிறுமி காணாமல் போனதாக, அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்த நிலையில், அலோக் குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் பேசும்போது, “சிறுமியின் தலையில் சுத்தியால் மூலம் அடித்த காயம் உள்ளது. மேலும், அவரது பிறப்புறுப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அலோக் குமாரை தற்போது கைது செய்துள்ளோம். அவர் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில், அந்த மந்திரவாதியையும் விரைவில் கைது செய்வோம்” என்று தெரிவித்தனர்.