கொரோனா தொற்றுக்கு பிறகு, பல்வேறு வியாபாரங்கள் முடங்கியுள்ளதால், தங்கத்தின் மீதான முதலீடு என்பது அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, நாடு முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய தங்கம் விலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, ரூபாய் 280 உயர்ந்து, ரூபாய் 44 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 5 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.