நிர்வாண வீடியோவிற்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய முதியவர்!

குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரின் செல்போனுக்கு, பெண் ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இவர்களது உரையாடல், பின்னர் ஆபாசமாக மாறியுள்ளது. மெசேஜ் உரையாடலுக்கு பின், அந்த பெண் வீடியோ கால் மூலமாக, முதியவரை தொடர்பு கொண்டுள்ளார்.

நிர்வாணமாக வீடியோ காலில் வந்த அவர், முதியவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அந்த உரையாடலை Record செய்துள்ளார். இதையடுத்து, முதியவரை தொடர்பு கொண்டு, தனக்கு 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். இல்லையென்றால் போலீசில் புகார் அளிப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

அப்போது அவர் பணம் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று விக்ரம் ரதோட் என்பவர் அவரை தொடர்புகொண்டு, தான் டெல்லி சைபர் க்ரைம் காவல்துறையில் பணியாற்றுவதாகவும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ரூ.16.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டிய நிலையில், அந்த நபருக்கு சில தவனைகளாக அந்த பணத்தை செலுத்தியுள்ளார். இதையடுத்து, மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், நான் வீடியோவை Youtube சேனல் ஒன்றில் வெளியிட்டுவிட்டேன். அந்த சேனலின் உரிமையாளர் உங்களை தொடர்பு கொள்வார் என்று இணைப்பை துண்டித்துள்ளார்.

அவர் சொன்னதுபடியே, 2 நாள் கழித்து அவரை சேனலின் உரிமையாளர் தொடர்பு கொண்டு, வீடியோவை யூட்யூப்பில் இருந்து நீக்க ரூ.1.30 லட்சம் கேட்டுள்ளார். அன்று வங்கி விடுமுறை என்பதால் அவர் நண்பர் ஒருவர் மூலம் பணத்தை ஆன்லைனில் ட்ரான்பர் செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் ரதோட் அவரை அழைத்து, அந்த பெண் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் அவர்கள் பெற்றோர்கள் இழப்பீடாக பணம் கேட்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பயந்துப்போன அந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி, பந்த்ரா காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News