கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன.
கடந்த 38 ஆண்டுகளில் கர்நாடகாவில் எந்த அரசியல் கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரவில்லை.இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தை 57 சதவீதம் பேர் விரும்புவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. வரப்போகும் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக சி. வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 68 முதல் 80 இடங்களும் , மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அடுத்த முதலமைச்சராக யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், முன்னாள் முதல்வர் 39.1 சதவீதம் பேர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளதால் ஆளும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுமா? அல்லது ஆட்சியை பறிகொடுக்குமா என்பதை வரும் மே 13ம் தேதி தெரிந்துவிடும்.