மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த கோவிலில் உள்ள படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் திடீரென சரிந்து கீழே விழுந்தது.

படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர்.
உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க -மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.