திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள கடந்த 10 ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த தீயை தற்போது வரை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து 21 நாட்களாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த குப்பை கிடங்கை சுற்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தீ விபத்தில் ஏற்பட்ட புகையால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புகையின் காரணமாக சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல் மற்றும் தோல் அரிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.