தமிழில் வெளியான அன்பு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாலா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்திலும் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். இவர் டைரக்டர் சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆவார்.
பாலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 7 ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் பாலா உருக்கமாகப்பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் 3 நாட்களுக்குள் எனக்குப்பெரிய அறுவைச் சிகிச்சை நடக்க உள்ளது. இந்த அறுவைச்சிகிச்சையின்போது எனக்கு மரணம் கூட நேரிட வாய்ப்பு உள்ளது. உங்கள் பிரார்த்தனையால் உயிர் பிழைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பிறப்போ இறப்போ கடவுள் முடிவு செய்வார்” என்று கூறியுள்ளார்.