இரண்டு பெண்களை பைக்கில் உட்கார வைத்து இளைஞர் செய்த சாகசம் – இணையத்தில் வைரல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பைக்கில் முன்னும் பின்னும் இரண்டு பெண்களை அமரவைத்து இளைஞர் ஒருவர் சாகசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த மும்பை போக்குவரத்து போலீசார் அந்த வாலிபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் டுவிட்டரில் “பிகேசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வீடியோவில் உள்ள நபர்கள் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும் என கூறி உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News