இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கோலிவுட்டின் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்த இவர், தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், ஹிந்தி தான் எனது தாய்மொழி, ஹிந்தி திரைப்படங்களை பார்த்து தான் வளர்ந்தேன் என்றார்.
ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு ஹிந்தியில் குறைவு என்று கூறினார். இதனால் தான் தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன் என பேசியுள்ளார். தற்போது இவரது பேச்சு சமூக வலைதளங்கலில் தீயாய் பரவி வருகிறது.