சினிமா
விடுதலை படத்தை கழுவி ஊற்றிய பிரபல எழுத்தாளர்! காப்பி அடித்தாரா வெற்றிமாறன்?
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. கடந்த 31-ஆம் தேதி அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை பார்த்த சினிமா விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பல்வேறு தரப்பினர், தங்களது பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், எரியும் பனிக்காடு, செம்புலம், மிளிர் கல் ஆகிய புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் ரா.முருகவேள், விடுதலை படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், சோளகர் தொட்டி, வீரப்பன் வாழ்ந்ததும் ஆகிய நாவல்களில் உள்ள காட்சிகள், விடுதலை படத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக, விமர்சித்துள்ளார். மேலும், அரசியலோ வரலாற்று நேர்மையோ கொஞ்சமும் இல்லை என்றும் விடுதலை படத்தை விமர்சித்துள்ளார்.
You must be logged in to post a comment Login